Thu, May13, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

அடிப்படைவாதத்தை போதித்ததாக ஒலுவிலில் இருவர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு அடிப்படைவாதத்தை போதித்ததாக தெரிவித்து அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் பிரதேசத்தில் இரண்டு பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2018 ஆம் ஆண்டில் ஒலுவில் பிரதேசத்தில் க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கு சந்தேக நபர்கள் இருவரும் அடிப்படைவாதத்தை போதித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அடிப்படைவாத போதனையை நடத்தும் போது, மாணவர்கள் மீது இவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி விசாரணைகளை நடத்திய பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் 30 மற்றும் 39 வயதுடைய இருவரை நேற்று இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இருவரும், கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x