அஞ்சலி செலுத்தியவர்களுக்கு நன்றி தெரிவிப்பு

இ.தொ.காவின் போசகரும், முன்னாள் தலைவருமான முத்து சிவலிங்கத்தின் இறுதி கிரியைக்கு நேரடியாக வருகை தந்து அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்த்தன, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோர் இரங்கல் கடிதத்தை அனுப்பி வைத்ததுடன், தொலைப்பேசி ஊடாகவும் இரங்கலை பகிர்ந்துக் கொண்டனர்.

அன்னாரின் குடும்பத்தினருக்கும் இ.தொ.காவிற்கும்  இரங்கலை பகிர்ந்துக் கொண்ட அனைவருக்கும் இ.தொ.கா சார்பாக மனமார்ந்த  நன்றிகளை செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW