அக்டோபர் 16 முதல் மிதுனம் செல்லும் செவ்வாயால் இந்த 6 ராசிகளுக்கு யோகம் அடிக்கப் போகுது...

செவ்வாய் பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை வாரி வழங்கும். எந்த ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

அக்டோபர் 16 முதல் மிதுனம் செல்லும் செவ்வாயால் இந்த 6 ராசிகளுக்கு யோகம் அடிக்கப் போகுது...

Mars Transit in Gemini on 16th October 2022 : கிரகங்களின் தளபதியான செவ்வாய் தற்போது ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். அவர் அக்டோபர் 16 ஆம் தேதி மிதுன ராசிக்கு செல்லவிருக்கிறார். செவ்வாய் மோசமான பலன்களை வழங்கக்கூடிய கிரகமாக கருதப்படுவதால், இந்த செவ்வாய் பெயர்ச்சி கெடு பலன்களை அதிகம் தரும் என்று நினைக்கலாம்.

ஆனால் செவ்வாய் பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை வாரி வழங்கும். எந்த ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி நல்ல பலனைத் தரும். செவ்வாய் மேஷ ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இக்காலத்தில் எந்த சவாலையும் சமாளித்து வாழ்வில் முன்னேறுவீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தக்க வைக்க பல வாய்ப்புக்கள் கிடைக்கும். அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் காலமாக இருக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறுசிறு பிரச்சனைகள் வந்தாலும், அது விரைவில் சரியாகிவிடும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் வாழ்க்கை செழிப்பாக இருக்கும். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். மனக்குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். முக்கியமான பணிகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆனால் இக்காலத்தில் தேவையில்லாமல் பணத்தை செலவழிக்காமல் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

சிம்மம்

சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இது வருமானம் மற்றும் லாபத்தின் வீடாக கருதப்படுகிறது. ஆகவே இக்காலத்தில் நல்ல வருமானத்திற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி நிதி மேம்படும். எந்த துறையில் இருந்தாலும் வெற்றி கிடைக்கும். மேலும் உங்களின் வேலை செய்யும் பாணியும் மேம்படும். இதனால் பணியிடத்தில் நல்ல பாராட்டைப் பெறுவீர்கள். பங்குச் சந்தை, ஊக வணிகம் மற்றும் லாட்டரிகளில் முதலீடு செய்து நல்ல பணம் சம்பாதிப்பீர்கள். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த காலம் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் காலமாக இருக்கும். வியாபாரத்தில் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளால் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். பல வழிகளில் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக இக்காலத்தில் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்கால கட்டத்தில் அனைத்திலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். தடைப்பட்ட வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறும். அதே வேளையில் தொழில் ரீதியான பயணங்களை மேற்கொள்வீர்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். இக்காலத்தில் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கும் வாய்ப்புள்ளது.

அடுத்த 6 மாதத்திற்கு அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா?

கும்பம்

கும்ப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் வாழ்வின் பல இடங்களில் மாற்றம் ஏற்படும். எந்த வேலையையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எந்த திட்டத்திலும் சிறப்பாக செயல்படுவீர்கள். சந்தோஷத்தை அதிகரிக்கவும், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சிறந்த காலமாக இருக்கும். இக்காலகட்டத்தில் எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனையையும் சந்திக்கமாட்டீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Mars Transit in Gemini Effects on Zodiac Signs : The Mars Transit in Gemini will take place on 16 October 2022.