Thu, Jan28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

ஃபேஸ்புக் காதலனை நேரில் சந்திக்க விரும்பிய மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

பேஸ்புக் காதலனை நேரில் சந்திக்கச் சென்ற 17 வயது மாணவிக்கு நேர்ந்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கோவை செல்வபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி, கடலூரைச் சேர்ந்த ஏழுமலை என்ற 27 வயது நபரை பேஸ்புக் மூலம் பழகியுள்ளார்.

இந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது. இருவரும் மணிக்கணக்கில் செல்போனில் பேசியதாகவும் தெரிகிறது

இந்த நிலையில் தனது பேஸ்புக் காதலன் ஏழுமலையை நேரில் சந்திக்க விரும்பிய மாணவி அவரிடம் தனது விருப்பத்தை தெரிவித்தார்.

இதனையடுத்து இருவரும் திருச்சியில் சந்திக்க முடிவு செய்தனர். இதனை அடுத்து கோவையில் இருந்து திருச்சி செல்ல தனக்கு தெரிந்த ஒரு கால் டாக்சி டிரைவரிடம் அந்த மாணவி உதவி கேட்டிருக்கிறார்.

அந்த மாணவிக்கு உதவி செய்ய விரும்பிய கால் டாக்சி டிரைவர், அவரை அடைய விரும்பி மாணவியை மிரட்டி ஊட்டிக்கு அழைத்துச்சென்று ஓட்டலில் 3 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்

அதன் பின்னர் மாணவியை திருச்சிக்கு அழைத்து வந்து அங்கும் ஒரு ஓட்டலில் அறை எடுத்து மூன்று நாட்கள் பாலியல் கொடுமை செய்துள்ளார்.

அதன் பின்னர் வேளாங்கண்ணிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்த நிலையில் மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாணவியின் செல்போன் டவரை கண்காணித்ததில் அவர் வேளாங்கண்ணியில் இருப்பதை உறுதி செய்தனர்.

இதனை அடுத்து கோவை பொலிஸார் வேளாங்கண்ணி பொலிஸாருக்கு தகவல் அளிக்க, அவர்கள் மாணவியை மீட்டு ஏழுமலையை கைது செய்தனர்

பேஸ்புக் காதலனை சந்திக்க சென்ற மாணவிக்கு நேர்ந்த கொடூரம் கோவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்